மோகினியாக மாறிய திரிஷா

201605281456565368_Trisha-next-movie-tittle-name-mohini_SECVPFதிரிஷா நடிப்பில் தற்போது ‘நாயகி’ படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. திகில் படமாக உருவாகியுள்ள இதில் திரிஷா இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.

இப்படத்தை அடுத்து விஜய்யை வைத்து ‘மதுர’ படத்தை இயக்கிய மாதேஷ் இயக்கத்தில் திரிஷா நடிக்க இருக்கிறார். இப்படத்தை சூர்யா நடித்த ‘சிங்கம் 2’ படத்தை தயாரித்த எஸ்.லட்சுமண் குமார் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு ‘மோகினி’ என்று பெயர் வைத்திருக்கின்றனர்.

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் திரிஷாவுடன் சுகன்யா, கௌசல்யா, முகேஷ் திவாரி, யோகி பாபு, சாமி நாதன், ஆர்த்தி கணேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஹாரர் திரில்லர் படமாக உருவாக இருக்கிறது. இந்த படம் திரிஷாவின் சினிமா வரலாற்றில் முக்கிய பங்குவகிக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்கவுள்ளார். மேலும் ‘ஹாரிபாட்டர்’ படத்திற்கு விஷுவல் எபக்ட்ஸ் செய்த குழுவினர் இந்த படத்திற்கு ஸ்பெஷல் எபக்ட்ஸ் செய்யவுள்ளனர்.

இதன் படப்பிடிப்பு ஜூன் 2 ஆம் தேதி முதல் லண்டனில் ஆரம்பமாகிறது. தொடர்ந்து 40 நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு அதன் பிறகு இந்தியாவில் 20 நாட்களும், பாங்காக்கில் 10 நாட்களும், மெக்சிகோவிலும் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online