நடிகராகும் ஆசை நிறைவேறாததால் டைரக்டர் ஆனேன்: எஸ்.ஜே.சூர்யா பேட்டி

201605280956102465_i-like-acting-but-I-became-the-director-SJ-Surya-Interview_SECVPFகார்த்தி சுப்புராஜ் இயக்கியுள்ள புதிய படம் ‘இறைவி’. இதில் எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி ஆகியோர் நடித்துள்ளனர். சென்னையில் நடந்த ‘இறைவி’ படவிழாவில் படக்குழுவினர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது நடிகர் எஸ்.ஜே.சூர்யா கூறியதாவது:-

‘‘நான் சினிமாவில் பெரிய நடிகனாக வேண்டும் என்ற ஆசையில்தான் வந்தேன். ஆனால் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் டைரக்டரானேன்.

சில படங்களை டைரக்டு செய்த பிறகு படங்களில் கதாநாயகனாக நடிக்க தொடங்கினேன். எனது நடிப்பு சிறப்பாக இருந்ததாக பலரும் பாராட்டினர். ரசிகர்களும் சிறந்த நடிகராக அங்கீகரித்தனர்.

ஆனால் யாரும் நடிக்க வாய்ப்பு தரவில்லை. சினிமாவில் முன்னணி நடிகராக வேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறவில்லை. டைரக்டர்கள் என்னை நடிகராக ஏற்றுக்கொள்ளவில்லை. நான் எங்கே போனாலும் ஏன் நடிக்கிறீர்கள்.

படங்கள் டைரக்டு செய்ய வேண்டியதுதானே? என்று கேட்டார்கள். 16 வயதினிலே படத்தில் வரும் சப்பாணியைப்போலவே என்னை ஒதுக்கினர். இந்த நிலையில் கார்த்தி சுப்புராஜ் எனக்கு இறைவி படத்தில் நடிக்க வாய்ப்பு தந்துள்ளார். இதில் என்னை நல்ல நடிகனாகவும் உருவாக்கி இருக்கிறார்’’.

இவ்வாறு நடிகர் எஸ்.ஜே.சூர்யா கூறினார்.

நடிகர் ராதாரவி பேசும்போது, ‘‘நான் சமீபத்தில் வந்த மனிதன், மருது படங்களில் சிறப்பாக நடித்து இருந்ததாக பெயர் வாங்கினேன். ஆனாலும் யாரும் நடிக்க அழைக்கவில்லை.

சினிமாவில் தேவையில்லாவிட்டால் நாம் எதிரில் நின்றால் கூட அடையாளம் தெரியாது. இறைவி படம் சிறப்பாக வந்துள்ளது. விஜய் சேதுபதி அழகான அர்ப்பணிப்பு உணர்வு உள்ள நடிகர். இளைஞர்கள் யாரும் தாய், தந்தையரை முதியோர் இல்லத்தில் விட்டு விடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார்.

கபாலி பட டைரக்டர் பா.ரஞ்சித் பேசும்போது, ‘‘குறும்படங்கள் எடுத்து சினிமாவுக்கு வந்த இயக்குனர்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். பெண்களை மையப்படுத்தி அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் நீண்ட நாட்களாக வரவில்லை.

பெண்களை கேலி செய்வது போன்றும் அவர்களை இழிவுபடுத்துவது போன்றும்தான் அதிகம் படங்கள் வருகின்றன. ‘இறைவி’ பெண்களை உயர்வுபடுத்தும் படமாக வந்துள்ளது’’ என்றார்.

நடிகர் தம்பி ராமையா, டைரக்டர் கார்த்தி சுப்புராஜ், தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, சி.வி.குமார், பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட பலர் பேசினர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries