‘தனி ஒருவன்’, ‘மிருதன்’ வெற்றிக்குப் பிறகு ஜெயம் ரவி தற்போது ‘போகன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.
இவர் அடுத்ததாக ஏ.எல்.விஜய், சக்தி சௌந்திரராஜன், சுசீந்திரன், சமுத்திரக்கனி உள்ளிட்ட இயக்குனர்களின் படங்களில் அடுத்தடுத்து நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ள படத்திற்கு ‘தொண்டன்’ என்று தலைப்பு வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி ‘நிமிர்ந்து நில்’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.