காத்தாடி படத்தில் போலீசாக நடிக்கும் தன்ஷிகா

201605291555121639_Dhansika-police-role-play-in-kaathadi-movie_SECVPFசூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தன்ஷிகாவும் நடித்துள்ளார். இப்படம் அவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கும் தன்ஷிகா, இதைத் தொடர்ந்து ‘காத்தாடி’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இப்படத்தை ‘கத சொல்லப் போறோம்’ படத்தை இயக்கிய எஸ்.கல்யாண் இயக்கியுள்ளார். கதாநாயகனாக அவிஷேக் நடிக்கிறார். இவர் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் சித்தி மகனும், பிரபல நடிகை மகேஸ்வரியின் சகோதரனுமாவார்.

இப்படத்தில்தான் தன்ஷிகா போலீஸ் வேடத்தில் நடிக்கிறாராம். இப்படம் ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்து உருவாகிறதாம். இதனால், இப்படத்தில் சண்டைக்காட்சியில் வேறு நடித்திருக்கிறாராம். இப்படத்தில் சம்பத், ஜான் விஜய், மனோபாலா, கோட்டா சீனிவாசராவ், காளி வெங்கட், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏலகிரி, கேரளாவில் உள்ள வாகுமன் மற்றும் சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. விரைவில் படம் வெளியாக உள்ளது. அதற்கு முன்னதாக நாளை மாலை 8 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஷால் வெளியிடவுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries