எளிமையாக, ரகசியமாக நடந்த பிரியாமணி நிச்சயதார்த்தம்

Priyamani-gets-engagedபிரபல இயக்குனர் பாரதிராஜாவால் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை பிரியாமணி. அமீர் இயக்கத்தில் இவர் நடித்த ‘பருத்திவீரன்’ படம் இவருக்கு தேசிய விருது பெற்றுக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்த இவருக்கு எதிர்பார்த்தபடி எந்த படமும் கைகொடுக்கவில்லை.

இதையடுத்து, சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். தற்போது டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வரும் பிரியாமணி, தனது நீண்டநாள் காதலரை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூரில் உள்ள பிரியாமணியின் விட்டில் அவருக்கும் அவரது நீண்ட நாள் காதலரான முஸ்தபாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த திருமண நிச்சயதார்த்த விழாவில் இருவீட்டாரின் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

மிகவும் எளிமையாக நடைபெற்ற இவரது திருமண நிச்சயதார்த்தத்தை தொடர்ந்து, விரைவில் திருமண தேதியை அறிவிக்கவுள்ளார். திருமணத்தை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries