திரைப்படங்கள் வெளியிடுவதில் பாராபட்சம் பார்க்காமல் பிரச்சினை வருகிறது: ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., வேதனை

maxresdefault (1)ஆதவன், சாக்ஷி அகவர்வால், பவர்ஸ்டார் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘கககபோ’. இப்படத்தை பி.எஸ்.விஜய் இயக்கியிருக்கிறார். ஸ்ரீதேவர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் சென்னையில் நடந்தது.

இந்த விழாவில், திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் கலந்துகொண்டு படத்தின் ஆடியோவை வெளியிட்டார். அப்போது அவர் பேசும்போது, இப்போது சிறு படங்கள், பெரிய படங்கள் என பாராபட்சம் பார்க்காமல் படங்கள் வெளியிடுவதில் பிரச்சினை வருகிறது.

அதுபோல்தான் விஜய் நடித்த ‘தலைவா’ படத்தை வெளியிடக்கூடாது என்று பிரச்சினை எழுந்தது. அதனால் மனமுடைந்த தயாரிப்பாளர் உடல்நிலை சரியில்லாமல் போகவே, அதை கண்டு வருத்தமடைந்த நான் அதை வாங்கி வெளியிடுகிறேன் என்று அறிவித்தேன். இரவோடு இரவாக அய்யப்பன் 400 திரையரங்குகளை ‘தலைவா’ படம் வெளியிட புக் செய்தார். அதன்பின்னரே படம் வெளியானது.

இதுபோல, நிறைய சின்ன படங்களை வாழ வைத்த ஸ்ரீதேவர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்போது அவரது மகன் பாரதி அய்யப்பன் சார்பாக மீண்டும் துவங்கப்பட்டு சிறிய படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறது. அவரது தந்தைக்கு என் பூரண ஆசிகள் இருந்ததுபோன்று இவருக்கும் என் ஆசியும் எப்போதும் உண்டு என்று பேசினார்.

இப்படத்தில் சிங்கம் புலி, எம்.எஸ்.பாஸ்கர், கருணாஸ், மதன்பாப், மயில்சாமி, ரோபோ சங்கர் என 25-க்கும் மேற்பட்ட நகைச்சுவை நடிகர்கள் நடித்தள்ளனர். இப்படத்தை செல்வி சங்கரலிங்கம் தயாரித்துள்ளார். விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries