கமல் பாணியை பின்பற்றும் சிவகார்த்திகேயன்

201605311829046357_Kamal-styles-follow-Sivakarthikeyan_SECVPF‘அவ்வை சண்முகி’ படத்தில் கமல்ஹாசன் பெண் வேடத்தில் நடித்தார். இந்த படத்தில் பெண் குரலில் டப்பிங் பேசுவதற்கு முதலில் படக்குழுவினர் பெண் ஒருவரை தேர்வு செய்ய முடிவு செய்திருந்தனர். ஆனால் கமல் அதற்கு மறுப்பு தெரிவித்து அவரே டப்பிங் பேசினார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது அந்த பாணியை சிவகார்த்திகேயனும் பின்பற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் தற்போது நடித்து வரும் ‘ரெமோ’ படத்தில் பெண் வேடத்தில் நடிக்கிறார். இதில் ஒரு பெண்ணை வைத்து டப்பிங் பேச இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் முடிவு செய்திருக்கிறார்.

ஆனால், சிவகார்த்திகேயனோ தானே டப்பிங் பேச விரும்புவதாக கூறியிருக்கிறாராம். சிவகார்த்திகேயன் ஏற்கனவே பல குரல்களில் மிமிக்ரி செய்பவர். அதனால், இயக்குனர் சம்மதித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடித்து வருகிறார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online