ஆக்‌ஷனில் களமிறங்கும் சிம்பு

201605311455500897_Simbu-entering-action-movie_SECVPFசிம்பு நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பல பிரச்சனைகளை சந்தித்து வெளியான படம் ‘வாலு’. இதில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருந்தார். தமன் இசையமைத்திருந்த இப்படத்தை விஜய் சந்தர் இயக்கியிருந்தார். காதல் படமாக வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது மீண்டும் விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார். இப்படம் ஆக்‌ஷன் படமாக உருவாக உள்ளது. ஆகஸ்ட் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு நடிப்பில் கடந்த வெள்ளியன்று ‘இது நம்ம ஆளு’ படம் வெளியானது. நயன்தாரா சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ள இப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘அச்சம் என்பது மடமையடா’ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online