ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாகும் பிரேமம் நாயகி

201605301525343455_Premam-actress-pair-to-GVPrakash_SECVPFதமிழ் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த ‘டார்லிங்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘பென்சில்’ ஆகிய படங்கள் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து இவர் நடித்துவரும் ‘புருஸ்லீ’, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ ஆகிய படங்களும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ், ராஜீவ்மேனன் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவிருக்கிறார்.

தற்போது, இப்படத்தின் கதாநாயகி யார் என்பது தெரிய வந்துள்ளது. அதாவது, மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தில் தனது நடிப்பாலும், அழகாலும் மலையாள ரசிகர்களை மட்டுமல்லாது, தமிழ் ரசிகர்களையும் கட்டிப்போட்ட சாய் பல்லவிதான் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கப் போகிறார். இதை ஜி.வி.பிரகாஷே உறுதி செய்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online