அனுஷ்காவைப் போல் உடல் எடையை அதிகரிக்க மாட்டேன்: தமன்னா

201605301510454534_Tamanna-says-she-wont-increase-weight-like-anushka_SECVPFஇலியானாவுடன் ‘கேடி’ படத்தில் தமிழில் அறிமுகமான தமன்னா பின்னர் தமிழ் திரை உலகின் முன்னணி நாயகியாக உயர்ந்தார். இன்று வரை நிலையான இடத்தில் இருக்கிறார்.

தெலுங்கிலும் முக்கிய இடம் பிடித்திருக் கிறார். ‘பாகுபலி’ படத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ‘பாகுபலி–2’ லும் இடம் பிடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘தோழா’ வெற்றிப்படமாக அமைந்தது.

இப்போது தமிழில் தர்மதுரை, கத்திச்சண்டை படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். பிரபுதேவாவுடன் நடிக்கும் புதிய படத்துக்காக தமன்னா தனது எடையை அதிகரித்திருக்கிறார். கதைக்காக அவர் இந்த முயற்சியில் இறங்கி உள்ளார் என்று தகவல்கள் வெளியாகின. இதுபற்றி தமன்னாவிடம் கேட்டபோது…

“நான் பிரபுதேவாவடன் நடிக்கும் படத்தில் எனது வழக்கமான தோற்றத்தில்தான் நடிக்கிறேன். இது உடம்பின் எடையை அதிகரித்து நடிப்பதற்கான கதை அல்ல. நான் இதுவரை அனுஷ்கா போல எந்த படத்திலும் உடம்பை வருத்தி நடித்தது இல்லை. அப்படி நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அந்த முயற்சியில் இறங்கும் எண்ணமும் கிடையாது” என்றார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries