நிச்சயதார்த்தம் பற்றி ரசிகர்கள் விமர்சனம்: கோபமடைந்த பிரியாமணி

201605311724180726_Fans-comments-on-Engagement-priyamani-Angry_SECVPF‘கண்களால் கைது செய்’ படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானவர் பிரியாமணி. ‘பருத்தி வீரன்’ இவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. தமிழ், தெலுங்கில் நடித்து வந்த பிரியாமணிக்கு தற்போது பெரிதாக படங்கள் எதுவும் இல்லை. அவரது காதலரும் தொழில் அதிபருமான முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

இவர்களுடைய நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது. இந்த தகவலை பிரியாமணி அனைவருக்கும் தெரிவித்து இருந்தார்.

பிரியாமணி–முஸ்தபாராஜ் நிச்சயதார்த்தம் குறித்து ரசிகர்கள் இணைய தளங்களில் தங்கள் விருப்பம் போல் விமர்சனம் செய்து இருந்தனர். இது பிரியா மணிக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கூறிய அவர்…

“நான் ஒரு புதிய வாழ்கை தொடங்குகிறேன். அதற்கு உங்கள் எல்லோருடைய ஆசீர்வாதமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையால்தான் என்னுடைய நிச்சயதார்த்தம் பற்றி நான் பகிர்ந்து கொண்டேன்.

ஆனால் எனது நிச்சயதார்த்தம் பற்றி ரசிகர்கள் சிலர் மிக மோசமான கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள். இதனால் நான் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.

அவர்கள் தங்களை இன்னும் வளர்த்துக் கொள்ள வேண்டும். எனது சொந்த வாழ்க்கை, விஷயங்கள் குறித்து என் பெற்றோர், எனது வருங்கால கணவர் தவிர வேறு யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries