படப்பிடிப்புக்கு தாமதமாக வந்த நடிகை அஞ்சலி நீக்கம்

201606021055296419_actress-Anjali-the-late-from-shooting-spot-she-fire_SECVPFநடிகை அஞ்சலி தமிழ், தெலுங்கு படங்களில் தீவிரமாக நடித்துக்கொண்டு இருக்கிறார். விஜய்சேதுபதியுடன் நடித்த ‘இறைவி’ படம் திரைக்கு வருகிறது. கன்னடத்தில் தர்ஷன் ஜோடியாக நடிக்க சக்கரவர்த்தி என்ற படத்தில் அவரை ஒப்பந்தம் செய்தனர். இந்த படத்தை சிந்தன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு பெங்களூருவில் தொடங்கியது.

படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளில் தர்ஷன், அஞ்சலி நடிக்கும் காட்சிகளை படமாக்க திட்டமிட்டனர். இதற்காக அஞ்சலியை எதிர்பார்த்து துணை நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் காத்திருந்தனர். ஆனால் அஞ்சலி நீண்ட நேரமாக வரவில்லை. இதனால் படக்குழுவினர் பொறுமை இழந்தனர். தயாரிப்பாளர் பணம் விரயமாவதாக புலம்பினார்.

பல மணி நேரத்துக்கு பிறகு தாமதமாக அஞ்சலி வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த படக்குழுவினர் அஞ்சலியை அந்த படத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்து அவரை படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேற்றி விட்டனர். அஞ்சலிக்கு பதில் நடிகை தீபா சன்னதியை தேர்வு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online