குற்றம் 23 படத்தில் தென்றலாக வீசும் மகிமா

201606021519467640_Kutram-23-movie-mahima-acting-thenral-role_SECVPFசாட்டை படம் மூலம் பிரபலமானவர் நடிகை மகிமா. இப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது. இப்படத்தை அடுத்து ‘மொசக்குட்டி’ என்ற படத்தில் நடித்தார். மேலும் இவரது நடிப்பில் ‘கிட்னா’ என்னும் படம் உருவாகி வருகிறது.

தற்போது அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் ‘குற்றம் 23’ படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக மகிமா நடித்து வருகிறார். இப்படம் மெடிக்கல் கிரைம் திரில்லர் கதையாக உருவாகி வருகிறது. இப்படம் தனது கலைப்பயணத்திற்கு அமைந்த ஒரு சிறந்த தூண் எனவும், தமிழ் சினிமாவில் தன்னுடைய நிலையை ஒரு படி மேலே எடுத்து செல்லும் படமாகவும் அமையும் என்கிறார் மகிமா.

மேலும் இப்படத்தை பற்றி கூறுகையில், ‘முதன் முதலில் எனக்கு அறிவழகன் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்ததும், நான் சற்றே படப்படப்பானேன். அதன் பின்பு காலையில் எனக்கு நடைபெற்ற நடிப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று, அன்று மாலையே படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டேன்.

முதன் முதலில் அருண் விஜய்யுடன் நடிக்க போகிறோம் என்ற பயம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் அவரின் சுமுகமான பண்பும், நட்பு ரீதியாக பழகும் அவரின் இயல்பும் என்னை அந்த பயத்தில் இருந்து வெளியே கொண்டு வந்தது.

என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு நான் அவரின் நடிப்பிற்கு தீவிர ரசிகையாகி விட்டேன் என்பது தான் உண்மை. அது மட்டுமின்றி தடையற தாக்க படத்தில் அவரின் திறம்பட நடிப்பையும், அற்புதமான நடனத்தையும், அதிரடியான சண்டை காட்சிகளையும் கண்டு நான் பல முறை வியந்தது உண்டு.

இந்த படம் எனக்கு கிடைத்த ஒரு அறிய பொக்கிஷம். என்னுடைய தென்றல் கதாப்பாத்திரத்தை நான் அதிக அளவில் காதலிப்பது மட்டுமில்லாமல் அந்த வேடத்தின் உயிராகவே நான் மாறியுள்ளேன்’ என்றார் மகிமா.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries