கபாலி ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Confirmed-Kabali-audio-launch-on-June-12ரஜினி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘கபாலி’. ரசிகர்களிடையே அதிக ஏதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தை ரஞ்சித் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் இந்தியளவில் சாதனை படைத்தது. இப்படம் மற்றும் இப்படத்தின் பாடல்கள் எப்போது வெளியாகும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு, தற்போது இப்படத்தின் ஆடியோ வெளியிட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் கலைப்புலி தாணு, தன்னுடைய சமூக வலைதளத்தில் ‘கபாலி’ படத்தின் ஆடியோவை ஜூன் 12ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார். இது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்தில் வெளியான டீசரில் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை ரசிகர்களிடையே அதிகம் வரவேற்கப்பட்டது. அதுபோல் பாடல்கள் சிறப்பாக இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

‘கபாலி’ படத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஜூலை 1ம் தேதி படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online