உதவியாளரை இயக்குனர் ஆக்கியது ஏன்?: சுந்தர்.சி பதில்

201606031308518081_Sundar-C-Answer-to-muthina-kathirikai-movie-assistant_SECVPFஇயக்குனர் சுந்தர்.சி. கதாநாயகனாக நடித்து தயாரிக்கும் படம் ‘முத்தின கத்திரிகா’. இதில் சுந்தர்.சி. ஜோடியாக பூனம் பஜ்வா நடிக்கிறார். இவர்களுடன் சதீஷ், விடிவி கணேஷ் சிங்கம்புலி உள்பட பலர் நடித்திருகிறார்கள்.

சுந்தர்.சி.யிடம் நீண்ட நாட்கள் உதவியாளராக இருந்த வெங்கட் ராகவன் ‘முத்தின கத்திரிகா’ படத்தை இயக்கியுள்ளார். சித்தார்விபின் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது படம் பற்றி கூறிய சுந்தர்.சி….

‘‘நான் ஒருநாள் டி.வி.யில் ‘வெள்ளி மூங்கன்’என்ற மலையாளபடத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். படம் மிகவும் ரசனையாக சென்றது. சிரிப்பை அடக்கமுடியவில்லை. எனவே, இந்த படத்தை ‘ரீமேக்’ செய்யலாம் என்று முடிவு செய்தேன்.

இது 40வயது ஆன பிறகும் திருமணம் செய்து கொள்ளாத அரசியல்வாதி பற்றிய கதை. பல ஹீரோக்களிடம் கேட்டபோது அவர்கள் இந்த வேடத்தில் நடிக்க தயாராக இல்லை. எனவே நானே கதாநாயகனாக நடிக்க முடிவு செய்தேன். எனது உதவியாளர் வெங்கட்ராகவனை இந்த படத்தை இயக்கும்படி கேட்டுக்கொண்டேன்.

அவர் திறமைசாலி எனது வலது காரமாக செயல்பட்டவர். எனவே இந்த முடிவை எடுத்தேன். ஆனால் வெங்கட்ராகவன் அதற்கு தயாராக இல்லை. அவர் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும். ஆகவே வற்புறுத்தி இந்த படத்தை இயக்க வைத்தேன். படம் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது.

சிங்கம்புலி ‘காமெடி’ வில்லனாக நடிக்கிறார். இயக்குனர் வெங்கட் ராகவனின் திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் படம் உருவாகி இருக்கிறது. அரசியல் இருந்தாலும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. படம் முழுவதும் சிரித்துக் கொண்டே இருக்கலாம்.

அரண்மனையில், நடித்த பூனம்பஜ்வா இதில் நாயாகியாக நடித்திருக்கிறார். வெங்கட்ராகவனின் வளர்ச்சிக்கு இது முக்கிய படமாக இருக்கும்’’ என்றார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries