பேய் பட இயக்குனருடன் கைகோர்க்கும் அதர்வா

201606041842493198_atharva-joins-with-ghost-film-maker_SECVPFஅருள்நிதி நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் ‘டிமான்ட்டி காலனி’. இந்த படத்தை அஜய் ஞானமுத்து என்பவர் இயக்கினார். திகில் படமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இவர் அடுத்த படத்தை இயக்க தயாராகி விட்டார்.

அஜய் ஞானமுத்து இயக்கும் படத்தில் அதர்வா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் இவருக்கு ஜோடியாக புதுமுக நடிகையை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படமும் திகில் படமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதர்வா தற்போது பத்ரி வெங்கடேஷ் இயக்கி வரும் ‘செம போத ஆகாத’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இப்படம் முடிந்த பிறகு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா நடிக்க இருக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online