கல்லூரி மாணவியாக நடிக்கும் லட்சுமி மேனன்

201606041403419931_Lakshmi-Menon-plays-college-student_SECVPFலட்சுமி மேனன் தற்போது விஜய் சேதுபதியுடன் ‘றெக்க’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ‘வா டீல்’ படத்தை இயக்கிய ரத்தின சிவா இயக்கி வருகிறார். இதுவரை கிராமத்து வேடத்தில் நடித்து வந்த லட்சுமி மேனன் இந்த படத்தில் மாடர்ன் பெண்ணாக நடிக்கிறார்.

‘வேதாளம்’ படத்தில் லட்சுமி மேனன் கல்லூரி மாணவியாக நடித்தார். அதுபோல் இந்த படத்திலும் கல்லூரி மாணவியாக நடிக்கிறார்.

ஆனால், இந்த வேடம் முற்றிலும் புதுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. படம் முழுவதும் சுடிதார் மற்றும் மாடர்ன் உடையில் வலம் வர இருக்கிறார் லட்சுமிமேனன். இந்த படம் தன்னுடைய கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்று லட்சுமிமேனன் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, கும்பகோணம் மற்றும் காரைக்குடி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஜூலை மாதம் இதன் படப்பிடிப்பு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்சேதுபதி, லட்சுமிமேனனுடன் இந்த படத்தில் ஹரிஷ் உத்தமன், சதீஷ், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டி.இமான் இசையமைத்து வருகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online