நிவின் பாலியுடன் இணையும் அட்லி

201606051524453178_Atlee-joins-with-nivin-pauly_SECVPF‘ராஜா ராணி’ படம் மூலம் புகழ் பெற்ற அட்லி சமீபத்தில் விஜய்யை வைத்து ‘தெறி’ படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றும் வசூலிலும் சாதனை படைத்தும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இவர் தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து ‘சங்கிலி புங்கிலி கதவை தொற’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இதில் ஜீவா நாயகனாகவும் ஸ்ரீதிவ்யா நாயகியாகவும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மேலும் ஒரு படத்தை அட்லி தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் கதாநாயகனாக நிவின் பாலி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நிவின் பாலி தமிழில் ஏற்கனவே ‘நேரம்’ படத்தில் நடித்தவர். சமீபத்தில் மலையாள மொழியில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் கதாநாயகனாக நடித்தவர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries