பவர் ஸ்டாருக்கென்று தனி பாடி லாங்குவேஜ் இருக்கு: சிவா

201606051245093455_Power-star-body-language-is-alone-siva_SECVPFமிர்ச்சி சிவாவும் பவர்ஸ்டார் சீனிவாசனும் இணைந்து ‘அட்ரா மச்சான் விசிலு’ என்ற படத்தில் நடித்துள்ளார்கள். ஜீவாவை வைத்து கச்சேரி ஆரம்பம் படத்தை இயக்கிய திரைவண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

கதாநாயகியாக பெங்களூரை சேர்ந்த நைனா சர்வார் என்பவர் நடித்துள்ளார். இவர்களுடன் சென்ராயன், அருண் பாலாஜி, சிங்கமுத்து, மன்சூர் அலிகான், டிபி.கஜேந்திரன், மதுமிதா என பலர் நடித்துள்ளனர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் சிவா பேசும்போது, ‘பவர்ஸ்டாரோட பெர்பார்மன்ஸ் பத்தி சொல்லனும்னா, ஒரு காட்சியில் நடிக்கும் போது எப்படியெல்லாம் ரியாக்சன் கொடுக்கலாம்னு தெரியும்.

ஆனால் இப்படியெல்லாம் கூட ரியாக்சன் கொடுக்க முடியுமாங்கிறதை பவர்ஸ்டாரை பார்த்துத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். அந்த அளவுக்கு புதுசு புதுசா ரியாக்சன் கொடுத்திருக்கிறார்.

யாராவது ஒருத்தர் ஒரு காட்சில பீல் பண்ணி பேசும்போது நாம சாதாரணமா ஒரு ரியாக்சன் கொடுத்தா, அவரு மட்டும் சாட்டைல அடிச்சமாதிரி ஒரு ரியாக்சன் கொடுப்பார். சான்சே இல்லை. அவருக்குன்னு தனியா ஒரு பாடி லாங்குவேஜ் வச்சிருக்கிறார்.

படத்துல என்னோட பேர் சிம்மக்கல் சேகர். பவர்ஸ்டாரோட தீவிரமான ரசிகனா நடிக்கிறேன். படத்துல அவருக்கு 22வது பிறந்தநாள் கொண்டாடுற மாதிரி ஒரு பாடல் இருக்கு. இந்தப்படத்துல வெறும் காமெடி மட்டும் இல்லை. ஒரு நடிகரோட ரசிகர்கள் எந்த அளவுக்கு இருக்கணும்னு ஒரு மெசேஜ் சொல்லிருக்கோம்’ என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online