மீண்டும் சித்தார்த் அபிமன்யூவாக மாறிய அரவிந்த்சாமி

201606051209293484_Aravindsami-again-turned-Siddharth-Abhimanyu_SECVPF‘தனி ஒருவன்’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீஎன்ட்ரி ஆனவர் அரவிந்த் சாமி. இதில் இவர் வில்லனாக நடித்திருந்தார். இவர் நடித்த சித்தார்த் அபிமன்யூ கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது. ஜெயம் ரவி கதாநாயகனாகவும் நயன்தாரா நாயகியாகவும் நடித்திருந்தார்கள்.

மோகன் ராஜா இப்படத்தை இயக்கியிருந்தார். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு சூப்பர் ஹிட்டானது. மேலும் இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் திருப்புமுனையாக அமைந்தது.

இந்நிலையில் இப்படம் தெலுங்கில் ரீமேக்காகிறது. இதில் ராம்சரண் தேஜா நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரித்சிங் நடிக்கிறார். இதில் மீண்டும் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது. இதற்கு ‘துருவா’ என்ற தலைப்பு வைத்திருக்கிறார்கள். தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றவாறு மோகன் ராஜா கதை எழுதியிருக்கிறார். சுரேந்தர் ரெட்டி இப்படத்தை இயக்குகிறார். தமிழுக்கு இசையமைத்த ஆதியே தெலுங்கு ரீமேக் படத்திற்கும் இசையமைக்கின்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries