பிரார்த்தனையின் போது பழம்பெரும் மலையாள நடிகர் ஆலயத்தில் மயங்கி விழுந்து பலி

201606061027354742_Legendary-Malayalam-actor-James-Stalin-death_SECVPFதிருவனந்தபுரம் அருகே உள்ள போத்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் ஸ்டாலின் (வயது 69). பழம்பெரும் மலையாள நடிகரான இவர் தனது வீடு அருகே உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமைதோறும் பிரார்த்தனைக்கு செல்வது வழக்கம்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம்போல ஜேம்ஸ் ஸ்டாலின் ஆலயத்திற்கு சென்றிருந்தார். பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தபோது திடீரென்று நடிகர் ஜேம்ஸ் ஸ்டாலின் மயங்கி விழுந்தார். இதனால் அருகில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அங்கிருந்த ஒரு டாக்டர், ஜேம்ஸ் ஸ்டாலினை பரிசோதனை செய்து பார்த்தார். அப்போது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆலயத்திற்கு வந்தவர்கள் சோகத்தில் மூழ்கினார்கள். உடனடியாக அவரது உடல் வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது.

ஜேம்ஸ் ஸ்டாலின் மரணம் அடைந்த தகவல் கிடைத்ததும் அக்கம் பக்கத்தினரும் மலையாள திரையுலகினரும் திரண்டு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

மலையாள திரையுலகின் ஜாம்பவானான மறைந்த நடிகர் பிரேம்நசீர் முதல் தற்போதைய மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வரை பலருடன் ஏராளமான படங்களில் நடிகர் ஜேம்ஸ் ஸ்டாலின் நடித்து உள்ளார்.

1977–ல் பிரேம்நசீர் நடிப்பில் வெளியான ‘மோகமும்முக்தியும்’ என்ற மலையாள படத்தில் முதன் முதலாக ஜேம்ஸ் ஸ்டாலின் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து உள்ள அவர் கடைசியாக மோகன்லாலுடன் ‘காக்க குயில்’ என்ற படத்தில் நடித்திருந்தார். பெரும்பாலும் தந்தை வேடங்கள், குணச்சித்திர வேடங்களே அவருக்கு அமைந்தன.

மரணமடைந்த நடிகர் ஜேம்ஸ் ஸ்டாலினுக்கு மோள் என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். மனைவி மோள் ஆசிரியையாக பணியாற்றியவர்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries