அப்பாவுடன் இருந்தால் தனி உற்சாகம் பிறக்கும்: சுருதிஹாசன்

201606081532218485_Shruthi-hassan-about-dad-kamal-hassan_SECVPFகமல்ஹாசனின் ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பு அமெரிக்காவில் தொடங்கி இருக்கிறது.‘தசாவதாரம்’ படத்தில் கமல் நடித்த ‘பல்ராம்நாயுடு’ பாத்திரத்தை முமுநீள கதையாக்கி அந்த வேடத்தில் கமல் நடிக்கிறார். இதில் முதல்முறையாக சுருதிஹாசன் தனது தந்தையுடன் அவரது மகளாவே நடிக்கிறார். கமலின் இளைய மகள் அக்ஷரா இந்த படத்தில் துணை இயக்குனராக பணிபுரிகிறார்.

அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடந்து வரும் ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பில் தனது தந்தையுடன் நடிக்கும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருக்கும் சுருதிஹாசன்…

‘‘அப்பா படப்பிடிப்பு தளத்தில் இருந்தால் அந்த இடமே முழு நம்பிக்கை நிறைந்த உற்சாக உலகமாக மாறிவிடும். தன்னை அறியாமலே உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.

முதல் நாள் படிப்பிடிப்பு அட்டகாசமாக இருந்தது. அப்பாவுடன் பணியாற்றுவது மகிழ்ச்சி, கவுரவம். அவர் உற்சாகமான உத்வேகத்தை கொண்டு வந்துவிடுகிறார். அவர் படப்பிடிப்பு தளத்தில் இருந்தாலே போதும், அந்த உற்சாக சக்தி எனக்குள் பரவிவிடுகிறது’’ என்று கூறியுள்ளார்.

இந்த படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு அமெரிக்காவிலும், 20 சதவீத படப்பிடிப்பு இந்தியாவிலும் நடக்கிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு கமலின் இந்த படத்துக்கு இளையராஜா இசை அமைக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries