63-வது பிலிம்பேர் விருது : அஜித் நடித்த என்னை அறிந்தால் 5 விருதுகளுக்கு பரிந்துரை

201606081205434993_63rd-film-fare-awards-yennai-arindhal-movie-nomination-5_SECVPFதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய சினிமாவில் பிலிம்பேர் சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து ஆண்டு தோறும் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. சினிமா உலகில் தேசிய விருதுக்கு அடுத்தபடியாக பிலிம்பேர் விருதையே கலைஞர்கள் பெரிய கௌரவமாக நினைக்கின்றனர்.

அந்த வகையில் இந்த வருடம் 63-வது பிலிம்பேர் விருது வழங்கும் விழா வருகிற ஜுன் 18-ந் தேதி ஐதராபாத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த விருதுக்கு தமிழில் அஜித் நடித்து வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படம் 5 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சிறந்த நடிகர் (அஜித்), சிறந்த இசையமைப்பாளர் (ஹாரிஸ் ஜெயராஜ்), சிறந்த பாடலாசிரியர் (தாமரை), சிறந்த துணை நடிகர் (அருண் விஜய்), சிறந்த துணை நடிகை (பார்வதி நாயர்) ஆகிய விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ‘காக்கா முட்டை’, ‘தனி ஒருவன்’, ‘ஐ’, ‘பாபநாசம்’ ஆகிய படங்களும் 3-க்கும் மேற்பட்ட விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

63-வது பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படங்கள் மற்றும் கலைஞர்களின் முழு விபரம்

சிறந்த படம் : ‘36 வயதினிலே’, ‘ஐ’, ‘காக்கா முட்டை’, ‘ஓகே கண்மணி’, ‘பாபநாசம்’, ‘தனி ஒருவன்’.

சிறந்த இயக்குனர் : மோகன் ராஜா (தனி ஒருவன்), ஜித்து ஜோசப் (பாபநாசம்), மணிரத்னம் (ஓகே கண்மணி), மணிகண்டன் (காக்கா முட்டை), ரோஜன் ஆண்ட்ரீவ்ஸ் (36 வயதினிலே), சங்கர் (ஐ).

சிறந்த நடிகர் : அஜித் குமார் (என்னை அறிந்தால்), தனுஷ் (அனேகன்), ஜெயம் ரவி (தனி ஒருவன்), கமல்ஹாசன் (பாபநாசம்), விக்ரம் (ஐ)

சிறந்த நடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ் (காக்கா முட்டை), கௌதமி (பாபநாசம்), ஜோதிகா (36 வயதினிலே), நயன்தாரா (நானும் ரௌடிதான்), நித்யா மேனன் (ஓகே கண்மணி).

சிறந்த துணை நடிகர் : அருண் விஜய் (என்னை அறிந்தால்), அரவிந்த் சாமி (தனி ஒருவன்), பார்த்திபன் (நானும் ரௌடிதான்), பிரகாஷ்ராஜ் (ஓகே கண்மணி), கே.எஸ்.ரவிக்குமார் (தங்கமகன்).

சிறந்த துணை நடிகை : ஆஷா சரத் (பாபநாசம்), தேவதர்ஷினி (36 வயதினிலே), லீலா சாலமன் (ஓகே கண்மணி), பார்வதி நாயர் (என்னை அறிந்தால்), ராதிகா சரத்குமார் (தங்கமகன்).

சிறந்த இசை : அனிருத் ரவிச்சந்தர் (மாரி), அனிருத் ரவிச்சந்தர் (நானும் ரௌடிதான்), ஏ.ஆர்.ரகுமான் (ஐ), ஏ.ஆர்.ரகுமான் (ஓ.கே.கண்மணி), ஹாரிஸ் ஜெயராஜ் (என்னை அறிந்தால்)

சிறந்த பாடலாசிரியர் : கபிலன் (என்னோடு நீ இருந்தால் – ஐ), மதன் கார்க்கி (பூக்களே சற்று – ஐ), தாமரை (உனக்கென்ன வேணும் சொல்லு – என்னை அறிந்தால்), விக்னேஷ் சிவன் (தங்கமே – நானும் ரௌடிதான்), விவேக் (வாடி ராசாத்தி – 36 வயதினிலே).

சிறந்த பின்னணி பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் (தங்கமே – நானும் ரௌடிதான்), ஏ.ஆர்.ரகுமான் (மென்டல் மனதில் – ஓகே கண்மணி), தனுஷ் (ஓ… ஓ… – தங்கமகன்), சித் ஸ்ரீராம் (என்னோடு நீ இருந்தால் – ஐ), விஜய் (ஏண்டி ஏண்டி – புலி).

சிறந்த பின்னணி பாடகி : கரிஷ்மா ரவிச்சந்திரன் (காதல் கிரிக்கெட் – தனி ஒருவன்), நீத்தி மோகன் (நீயும் நானும் – நானும் ரௌடிதான்), ஸ்ரேயா கோஷல் (பூக்களே சற்று – ஐ), ஸ்ருதிஹாசன் (ஏண்டி ஏண்டி – புலி), ஸ்வேதா மோகன் (என்ன சொல்ல – தங்கமகன்).

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online