விஜய் ஆண்டனி படத்தில் அரசியல்வாதியாக தியாகராஜன்

201606071632046068_Thiyagarajan-act-political-leader-in-Yeman-movie_SECVPFபாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் மூலம் நடிகராக சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் தியாகராஜன். அதன் பிறகு ‘மலையூர் மம்பட்டியான்’, ‘கொம்பேறி மூக்கன்’ போன்ற படங்களில் கதாநாயனாக நடித்தார். இதை தொடர்ந்து வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.

பின்னர் நடிப்பை குறைத்துக் கொண்டு இயக்கம், படத்தயாரிப்பு என்று இறங்கினார். இப்போது நீண்ட இடைவெளிக்குப்பிறகு தியாகராஜன் மீண்டும் நடிப்பில் தீவிர கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.

பாக்யராஜ் மகன் சாந்தனு நடிக்கும் ‘வாய்மை’ படத்தில் அவரது தந்தையாக தியாகராஜன் நடிக்கிறார். இந்த படத்தில் இவரது ஜோடி பூர்ணிமா பாக்யராஜ்.

இதுதவிர ‘பூமி’ என்ற படத்தில் பார்வையற்றவராக நடிக்கிறார். விஜய் ஆண்டனி நடிக்கும் ‘எமன்’ படத்தில் தியாகராஜன் அரசியல்வாதியாக நடிக்கிறார்.

இந்த படத்தை ஜீவாசங்கர் இயக்குகிறார். தற்போது 3 படங்களில் பிசியாக நடித்து வரும் தியாகராஜன் தொடர்ந்து நடிக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries