மிருதன் கூட்டணியில் உருவாகும் பேண்டஸி படம்

201606091851199207_Miruthan-team-formed-Fantasy-film_SECVPFஜெயம் ரவி நடிப்பில் இந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘மிருதன்’. இப்படத்தை சக்தி சொந்தர் ராஜன் இயக்கியிருந்தார். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். ஜோம்பி படமாக வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது.

மிருதன் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க இருக்கிறார். இந்த படம் ‘மிருதன்’ இரண்டாம் பாகம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இது பேண்டஸி படமாக உருவாக்க இருக்கிறார்கள். இப்படமும் மிருதன் போல் வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய படத்தை ‘நான் அவனில்லை’, ‘அஞ்சாதே’, ‘மீகாமன்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த நேமி சந்த் ஜெபாக் புரடொக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

ஜெயம் ரவி தற்போது ‘போகன்’ படத்தில் ஹன்சிகாவும் இணைந்து நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries