சபாஷ் நாயுடு படத்தில் இயக்குனராகிய கமல்

201606101831118276_kamal-direct-Sabash-naidu-movie_SECVPFகமல் நடிப்பில் வெளிவந்த ‘தசவதாரம்’ படத்தில் இடம்பெற்ற பல்ராம் நாயுடு என்ற கதாபாத்திரத்தை வைத்து ‘சபாஷ் நாயுடு’ என்ற புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் கமல் நடிக்கிறார். பிரபல மலையாள இயக்குனர் டி.கே.ராஜீவ்குமார் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் தொடங்கியது.

இப்படத்தின் மூலம் ஸ்ருதிஹாசன் முதன்முறையாக தனது அப்பா கமலுடன் இணைந்து நடிக்கிறார். கமலின் இளைய மகளான அக்ஷரா ஹாசன் உதவி இயக்குனராக பணியாற்றுகிறார்.

இந்நிலையில், நேற்று ஸ்ருதிஹாசன் ஆடும் ஒரு பாடல் ஒன்றை படமாக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், துரதிருஷ்டவசமாக இப்படத்தின் இயக்குனர் ராஜீவ்குமாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, அந்த பாடலை கமல்ஹாசனே இயக்கியுள்ளார்.

மேலும், இயக்குனர் உடல் நலம் தேறும்வரை இயக்குனர் பணியை கமலே தொடங்குவார் என்று கூறப்படுகிறது. எனவே, பாடல் காட்சிக்கு பிறகு படத்தில் இடம்பெறும் ஒரு சில காட்சிகளை கமலே இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.

இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. ‘சபாஷ் நாயுடு’ தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries