கட்டப்பாவாக மாறிய சிபிராஜ்

201606101753295825_Sibiraj-play-kattappa-role-in-new-movie_SECVPFராஜமெளலி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘பாகுபலி’. இதில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இதில் கட்டப்பா கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருந்தார். இதில் இவரின் கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது.

தற்போது சத்யராஜின் மகன் சிபிராஜ் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜாக்சன் துரை’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தை அடுத்து சிபிராஜ், ‘கட்டப்பாவை காணோம்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் கட்டப்பாவாக சிபிராஜ் நடிக்கவுள்ளார்.

முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ள இந்த படத்தை மணி என்பவர் இயக்கவுள்ளார். இதில் சிபிராஜிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

சிபிராஜின் ‘ஜாக்சன் துரை’ படம் தெலுங்கில் ‘கட்டப்ப ராஜூ’ என்ற பெயரில்தான் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries