தமிழ் படங்களிலும் வெற்றி பெற விரும்புகிறேன்: நிவின் பாலி

201606101242258020_I-am-win-also-tamil-films-nivin-pauly_SECVPFமலையாளப் படங்களில் முன்னணி ஹீரோவாக வளர்ந்து இருப்பவர் நிவின் பாலி. இவர், தமிழில் அறிமுகமான படம் ‘நேரம்’. இருமொழி படமான இதில் இவரது நடிப்பு பாராட்டு பெற்றது. என்றாலும் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கவில்லை.

இப்போது, முதல் முறையாக ஒரு நேரடி தமிழ் படத்தில் நிவின் பாலி நடிக்கிறார். இது, கன்னடத்தில் வெற்றி பெற்ற ‘உலி தவருகண்டந்தே’ படத்தின் ‘ரீமேக்’. இதில், நிவின் பாலியின் ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீனி என்ற கன்னட நடிகை நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தூத்துக்குடியில் தொடங்கியது. இதுதவிர அட்லியின் படத்திலும் நிவின் பாலி நடிக்க இருக்கிறார்.

மலையாள படங்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிவின் பாலி தமிழில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டுவது குறித்து அவரிடம் கேட்ட போது…

“மலையாளத்தில் முக்கிய ஹீரோ என்றாலும், தமிழிலும் ஒரு நல்ல இடத்தை பிடிப்பது முக்கியம். தமிழ், மலையாளம் என்று இரட்டை சவாரி செய்வது எனது நோக்கம் அல்ல. தமிழ் பட உலகம் பெரியது. எனவே, அங்கும் வெற்றி பெற விரும்புகிறேன்” என்றார்.

கேரளா நாயகிகளை முன்னணி இடத்துக்கு கொண்டு செல்வது தமிழ் பட உலகம். நிவின் பாலி எந்த அளவுக்கு தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெறுவார் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online