ஆபாசமாக நடித்ததாக எதிர்ப்பு: காஜல் அகர்வாலின் முத்தக்காட்சி நீக்கி தணிக்கை குழு நடவடிக்கை

201606100943262702_Censor-Board-action-to-Kajal-Agarwal-kissing-scene-removing_SECVPFகாஜல் அகர்வால் ‘டூ லப்ஷான் கி கஹானி’ என்ற இந்தி படத்தில் கதாநாயகன் ரன்தீப் ஹூடாவுடன் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தக்காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தமிழ் படங்களில் இதுபோன்ற காட்சிகளில் நடிக்க அவர் மறுத்து வந்தார். படுக்கை அறை காட்சிகள் மற்றும் அரைகுறை உடை காட்சிகளில் நடிப்பதையும் தவிர்த்தார்.

ஆனால், இந்தி படத்தில் அவர் முத்தக்காட்சியில் நடிக்க சம்மதித்தது திரையுலகினரை அதிர வைத்தது. இந்த முத்தகாட்சி படங்கள் இணையதளங்கள் மற்றும் வாட்ஸ் அப்களிலும் பரவியது.

இதுகுறித்து படத்தின் டைரக்டர் தீபக் திர்ஷாரி கூறும்போது, ‘‘கதைக்கு முத்தக்காட்சி தேவைப்பட்டதால் காஜல் அகர்வாலிடம் வற்புறுத்தி நடிக்க வைத்தோம்’’ என்றார். காஜல் அகர்வாலும் இந்தி பட மார்க்கெட்டை பிடிப்பதற்காக இந்த முத்தக்காட்சியில் நடிக்க சம்மதித்தார்.

படம் திரைக்கு வந்து முத்த காட்சிக்கு ரசிகர்கள் அளிக்கும் ஆதரவை பார்க்க காஜல் அகர்வால் ஆர்வமாக இருந்தார். ஆனால் தணிக்கை குழு கெடுபிடியால் அவரது ஆசை நிர்மூலமாகி இருக்கிறது.

படத்தை தணிக்கை குழுவினர் பார்த்து காஜல் அகர்வாலின் உதட்டோடு உதடு சேர்க்கும் முத்தக்காட்சி ஆபாசமாக இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த காட்சி அப்படியே படத்தில் இடம்பெற அனுமதிக்க முடியாது என்று கூறினர்.

பின்னர், 18 வினாடிகள் இடம்பெற்ற அந்த முத்தக்காட்சியை வெட்டி எறிந்து விட்டு படத்துக்கு அனுமதி அளித்துள்ளனர். இது படக்குழுவினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. முத்தக் காட்சியை வைத்து இந்தி மார்க்கெட்டை பிடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த காஜல் அகர்வாலுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries