ஹாலிவுட் படங்களால் இந்திய சினிமாவுக்கு பாதிப்பு ஏற்படும்: அமிதாப்பச்சன்

201606100901439507_Hollywood-blockbusters-to-the-impact-of-Indian-cinema_SECVPFஇந்தி நடிகர் அமிதாப்பச்சன் அளித்த பேட்டி வருமாறு:-

‘‘இந்தியாவில் சமீபகாலமாக ஹாலிவுட் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ரசிகர்கள் ஹாலிவுட் படங்களை விரும்பி பார்க்கிறார்கள்.

அந்தந்த மாநில மொழிகளில் ஹாலிவுட் படங்களை மொழி மாற்றம் செய்தும் வெளியிடுகின்றனர். இது இந்திய படங்களுக்கு பெரிய சவாலாக மாறி இருக்கிறது. இந்த நிலைமை இப்படியே நீடித்தால், உள்ளூர் படங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும்.

இப்போதே ஹாலிவுட் படங்களால் இந்திய படங்களின் வசூல் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளிலும் ஹாலிவுட் படங்கள் நன்றாக ஓடி உள்நாட்டு படங்களுக்கு போட்டியாக நிற்கின்றன. அந்த நாடுகளிலும் உள்ளூர் படங்கள் வசூல் குறைந்து விட்டது.

நான் சினிமாவில் வளர்ந்து கொண்டு இருந்த காலக்கட்டத்தில் படப்பிடிப்புக்காக அடிக்கடி அமெரிக்காவுக்கு சென்றது உண்டு. அப்போது அங்குள்ள பிரபலமான ஹாலிவுட் பட நிறுவன அதிபர்கள் என்னை சந்தித்து பேச அழைத்தனர்.

நான் அவர்களை சந்திக்க ஆர்வம் காட்டவில்லை. ஒரு தயாரிப்பாளர் என்னை சந்தித்து நமது இந்திய சினிமா மார்க்கெட் பற்றி புள்ளி விவரங்களோடு தெள்ளத்தெளிவாக பேசினார்.

நமது ஊர் சினிமா வியாபாரம் பற்றி இவ்வளவு விஷயங்கள் தெரிந்து வைத்து இருக்கிறார்களே என்று ஆச்சரியப்பட்டேன். அப்போது அவர் இந்திய சினிமா மார்க்கெட்டை எதிர்காலத்தில் ஹாலிவுட் படங்கள் ஆக்கிரமிக்கும்.

இந்திய படங்களுக்கு சவாலாக நிற்கும் என்றார். அவர் சொன்னது இப்போது நடந்து கொண்டு இருக்கிறது. முன்பெல்லாம் இந்தி படங்கள் திரைக்கு வரும்போது ஹாலிவுட் பட வசூல் பாதிக்கும் என்று அந்த படங்களை வெளியிடாமல் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பார்கள்.

ஆனால் தற்போது இந்தி படங்களோடு சேர்த்து ஹாலிவுட் படங்களையும் திரைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த போட்டியை தாக்கு பிடிக்க வேண்டுமானால் இந்திய படங்களையும் ஹாலிவுட் தரத்தோடு நாம் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.’’

இவ்வாறு அமிதாப்பச்சன் கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries