எளிமையாக நடைபெற்ற கபாலி இசை வெளியீட்டு விழா

201606111930193905_kabali-Songs-released_SECVPFரஜினி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘கபாலி’. ரஞ்சித் இயக்கியுள்ள படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் பாடல்கள் ஜூன் 12ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்தனர்.

ஆனால், நேற்றே இப்படத்தின் ஒரு பாடல் மற்றும் ரஜினி பேசும் வசனம் ஆகியவை சமூக வலைதளத்தில் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் பாடல்களை இன்றே வெளியிட்டுள்ளனர்.

இதன் பாடல் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குனர் ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இதன் முதல் ஆடியோ சி.டி.யை சௌந்தர்யா ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். நாளை முதல் இந்த சி.டி. கடைகளில் கிடைக்கும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ரஜினி அமெரிக்காவில் ஓய்வெடுத்து வருவதால், இந்த விழாவில் கலந்துக் கொள்ளவில்லை. இப்படத்தின் டீசர் பல சாதனைகளை படைத்தது போல், பாடல்களும் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries