சித்தார்த்துடன் ஜோடி சேரும் ஆண்ட்ரியா

Siddharth-to-romance-Andrea-nextசித்தார்த் நடிப்பில் கடைசியாக வெளியான ‘ஜில் ஜங் ஜக்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நடிக்க சித்தார்த் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதில் ‘தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்க இருக்கிறார். முதல் முறையாக இப்படம் மூலம் இவர்கள் ஜோடி சேருகிறார்கள். இப்படத்தை மிலண்ட் ராவ் என்பவர் இயக்கவுள்ளார்.

இவர் ஏற்கனவே ஆர்யாவின் தம்பி சத்யாவை வைத்து ‘காதல் 2 கல்யாணம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஆனால், இப்படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாக இருக்கும் புதிய படத்தை சித்தார்த்தின் எடாகி எண்டர்டெயின்மென்ட் நிறுவனமும், வயாகாம்18 ஆகிய நிறுவனமும் சேர்ந்து தயாரிக்கின்றார்கள்.

இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிரது. ஆகஸ்ட் மாதம் முதல் இதன் படப்பிடிப்பு தொடங்குவதாக கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online