நம்பிக்கை இருப்பதால் நடிக்க அழைக்கிறார்கள்: ஜி.வி.பிரகாஷ்

201606111308124749_believed-to-act-by-calling-GV-Prakash_SECVPFஜி.வி.பிரகாஷ்–ஆனந்தி நடித்துள்ள ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படம் திரைக்கு வர தயாராக இருக்கிறது. சாம் ஆண்டர்சன் இயக்கியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது பேட்டியளித்த ஜி.வி.பிரகாஷ்…

‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’வை தொடர்ந்து இந்த படத்திலும் ஆனந்தி எனது ஜோடியாக நடித்திருக்கிறார். டார்லிங் படத்துக்கு பிறகு சாம் ஆண்டன் இயக்கத்தில் நான் நடிக்கும் படம் இது. ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக இது இருக்கும்.

எனது 7–வது படமான இதை தொடர்ந்து புரூஸ்லீ, கடவுள் இருக்கான் குமாரு, கெட்ட பையன்சார் இந்த கார்த்தி, மற்றும் சசி, ராஜீவ்மேனன் இயக்கும் படங்கள், சூப்பர்குட் பிலிம்ஸ் படங்களில் நடிக்கிறேன். என் மீது நம்பிக்கை இருப்பதால் என்னை நடிக்க அழைக்கிறார்கள்.

நடிப்பு, இசை இரண்டிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன். நடிப்பில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காக உழைக்கிறேன். அது போல் நான் இசை அமைக்கும் படங்களும், பாடல்களும் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன்.

நடிக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் இசை அமைக்கிறேன். ஏதாவது ஒரு புதிய இசை மனதில் தோன்றினால் அசை செல்போனில் பாடி வைப்பேன். பின்னர் அதை பாடல் ஆக்குவேன். நடிப்பு–இசை இரண்டிலும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பது தான் எனது லட்சியம். நான் நடிக்கும் ராஜீவ்மேனன் படத்தில் எனது மாமா ஏ.ஆர்.ரகுமான் இசை அமைப்பது எனக்கு பெருமை.

இது தவிர நான் நடிக்கும் எல்லா படங்களுக்கும் நான்தான் இசை அமைக்கிறேன்.

சமீபத்தில் நான் இசை அமைத்த தெறி பட பாடல்கள் ‘ஹிட்’ ஆகின. ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ பட பாடல்களும் ஹிட் ஆகி இருக்கின்றன. எனது கடமையை சிறப்பாக செய்வதில் கவனமாக இருக்கிறேன்’’ என்றார்.

இயக்குனர் சாம் ஆண்டன் பேசும் போது, ‘‘இந்த கதை நன்றாக இருந்ததால் தான் ரஜினியின் ‘2.ஓ’ படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் இதை தயாரித்து இருக்கிறது’’ என்றார். ஆனந்தி, ‘‘இது வித்தியாசமான படம்‘‘ என்று கூறினார்.

நிகழ்ச்சியில் ராஜ்மோகன், அறிமுக வில்லன் நடிகர் லாரன்ஸ் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online