இருமுகன் படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய பிருந்தா மாஸ்டர்

201606122024499434_Brinda-master-birthday-celebrated-at-irumugan-shooting-spot_SECVPFபிரபல நடன இயக்குனர் பிருந்தா. இவர் தற்போது பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். முன்னணி நடிகர்கள் முதல் அறிமுக நடிகர்கள் வரை அனைவருக்கும் ஏற்றாற்போல் நடனம் அமைப்பது இவரின் சிறப்பு. பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இவர் நடனம் அமைத்திருக்கிறார். சிறந்த நடனத்திற்காக பல விருதுகளும் பெற்றிருக்கிறார்.

இவர் தற்போது விக்ரம்-நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘இருமுகன்’ படத்திற்கு நடனம் அமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்து வருகிறது. அங்கு விக்ரம்-நயன்தாரா பங்கு பெறும் டூயட் பாடலை படமாக்கி வருகிறார்கள்.

பிருந்தா மாஸ்டர் தன்னுடைய பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். ‘இருமுகன்’ படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். படக்குழுவினர் அனைவரும் பிருந்தா மாஸ்டருக்கு வாழ்த்துக்களை கூறினார்கள். ‘இந்த பிறந்த நாளை சிறப்பாக்கிய நயன்தாராவுக்கு எனது நன்றிகள்’ என்று பிருந்தா மாஸ்டர் கூறியிருக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online