கபாலி டீசர் திடீர் ஒத்திவைப்பு: ரசிகர்கள் ஏமாற்றம்

201606121553509214_kabali-Teaser-sudden-postponement-fans-disappointed_SECVPFரஜினி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘கபாலி’. தாணு தயாரித்துள்ள இப்படத்தை ரஞ்சித் இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் புதிய டீசர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா எளிமையாக சென்னையில் நடைபெற்றது.

இதில் ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் கலந்துகொண்டு பாடல்களை வெளியிட்டார். இணையதளத்திலும் இன்று வெளியிடப்பட்டது. மேலும் இதன் டிரைலர் அல்லது டீசர் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தயாரிப்பாளர் தாணுவும் இன்று காலை 11.06 மணியளவில் கபாலி படத்தின் டீசர் வெளியாகும் என்று அறிவித்தார்.

ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் டீசர் வெளியாகவில்லை. பின்னர் சிறிது நேரத்தில், தாணு ‘மன்னிக்கவும், கபாலி டீசர் சில காரணங்களால் இன்று வெளியாகவில்லை. இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும்’ என்று கூறினார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள்.

இருப்பினும் இதன் பாடல்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி சூப்பர் ஹிட்டாகி வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries