சொந்தக் குரலில் பேச ஆசைப்படும் காஜல் அகர்வால்

201606141924336201_Kajal-Agarwal-desires-to-speak-in-their-own-voice_SECVPFதமிழில் பாரதிராஜாவின் ‘பொம்மலாட்டம்’ படம் மூலம் அறிமுகமானவர் காஜல் அகர்வால். இப்படத்தை தொடர்ந்து முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஷால் என பலருடனும் நடித்துள்ளார். இவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் தற்போது தமிழில் ஜீவாவுடன் இணைந்து ‘கவலை வேண்டாம்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் விக்ரம் ஜோடியாக ‘கருடா’ படத்திலும் நடிக்க இருக்கிறார். இவருக்கு தனது சொந்தக் குரலிலேயே படங்களுக்கு டப்பிங் பேச வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம். விரைவில் இதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கப்போகிறாராம்.

காஜலுக்கு ஓரளவுக்கு தமிழ் பேசத் தெரியும் என்றாலும், இன்னும் சரளமாக பேச வரவில்லையாம். தமிழை விட தெலுங்கை சுலபமாகக் கற்றுக் கொண்ட இவர், கூடிய விரைவில் தமிழிலும் சரளமாக பேசக் கற்றுக்கொண்டு தனது படங்களுக்கு தானே டப்பிங் பேசுவேன் என்று நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries