தந்தை-மகளுடன் இணைந்து நடிக்கும் ஆர்யா

201606141826122228_Arya-to-act-with-Father-Daughter_SECVPF‘பெங்களூர் நாட்கள்’ படத்திற்கு பிறகு ஆர்யா தற்போது ‘கடம்பன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ஆர்யாவிற்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்து வருகிறார். மஞ்சப்பை இயக்குனர் ராகவன் இப்படத்தை இயக்கி வருகிறார். இதில் ஆர்யா ஆதிவாசியாக நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இவரது மகள் மதுவந்தியும் இந்த படத்தில் நடிக்கவுள்ளார். ஒரே படத்தில் தந்தை-மகளுடன் ஆர்யா நடிப்பது படத்தின் சிறப்பம்சம் என்று கூறப்படுகிறது.

‘கடம்பன்’ படத்தில் மதுவந்தி வனஅதிகாரியாக நடிக்கவுள்ளாராம். பழங்குடி வகுப்பினராக நடித்து வரும் ஆர்யாவுக்கு எதிரான கேரக்டரில் மதுவந்தி நடித்து வருவதாகவும் அவருக்கு உதவியாளராக ஒய்.ஜி.மகேந்திரன் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online