ஜூலையில் எஸ் 3 பாடல்கள் வெளியீடு

201606141650099397_S-3-songs-released-in-July_SECVPFசூர்யா தற்போது ‘சிங்கம்’ படத்தின் மூன்றாவது பாகமான ‘எஸ் 3’ படத்தில் நடித்து வருகிறார். ஹரி இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் சில வாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முடியவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் ஜூலை மாதம் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் முடிந்து விட்டதாகவும், ஜூலை முதல் வாரத்தில் மாஸ்டர் சிடி தயாராகி விடும் என்று கூறப்படுகிறது. ஜூலை இரண்டாவது வாரத்தில் இதன் பாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகின்றனர். மேலும் ராதாரவி, விவேக், நாசர், ராதிகா, சூரி உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries