பிகினி உடையில் நடிக்கும் ராய் லட்சுமி

201606141547399839_Raai-Lakshmi-acting-with-bikini-dress_SECVPF‘கற்க கசடற’ படத்தின் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகமானவர் ராய்லட்சுமி. அதன்பிறகு தமிழ், தெலுங்கில் நாயகியாகவும், பல்வேறு வேடங்களிலும் நடித்திருக்கிறார். ஒரு பாட்டுக்கும் நடனம் ஆடி இருக்கிறார்.

முதல் முறையாக இவர் நடிக்கும் இந்தி படம் ‘ஜூலி 2’ . இது அவரது 50–வது படம். இதுதவிர மற்றொரு படத்திலும் நடித்து இருக்கிறார். ‘ஜூலி–2’ படத்தில் ராய்லட்சுமிக்கு கவர்ச்சி வேடம். இதில் பிகினி உடையில் நடிக்கிறார். இந்த உடை அணியும்போது ஒல்லியாக கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். இதற்காக 10 கிலோ எடையை குறைத்து இருக்கிறார். இதுபற்றி ராய்லட்சுமி கூறும்போது…

இந்த படத்தில் கவர்ச்சியான இளம்பெண் வேடம். இதற்காக 2 மாதம் பயிற்சி செய்து 10 கிலோ எடையை குறைத்து இருக்கிறேன்.

‘ஜூலி–2’ படத்தின் 3–வது கட்ட படப்பிடிப்பு துபாயில் நடைபெறுகிறது. சில ‘ரிஸ்க்‘ ஆன காட்சிகளை ராஜஸ்தான் மாநிலத்தில் படமாக்க படக்குழு முடிவு செய்திருக்கிறது. இது நான் இந்தியில் நடிக்கத் தொடங்கிய முதல் படம். நான் நடித்த மொத்த படங்களில் இது 50–வது படம். எனவே இப்போது இந்த படத்தில் மட்டும்தான் முழு கவனம் செலுத்தி வருகிறேன்.

இதுதவிர தமிழில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட இருக்கிறேன். வேறு படங்களில் நடிப்பது பற்றி பின்னர் முடிவு செய்வேன்” என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online