ஜுலை மாதத்தில் வெளியாகும் முடிஞ்சா இவன புடி

201606141519370889_Mudinja-ivana-pudi-movie-release-in-july_SECVPFகே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கன்னட நடிகர் சுதீப் கதாநாயகனாக நடித்து வரும் ‘முடிஞ்சா இவன புடி’. சுதீப் நேரடியாக கதாநாயகனாக நடிக்கும் முதல் தமிழ் திரைப்பது இது. இப்படத்தின் நாயகியாக நித்யாமேனன் நடித்துள்ளார். மேலும், நாசர், சாய் ரவி, அச்சுதா குமார், லதா ராவ், சதீஷ், இமான் அண்ணாச்சி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் வில்லனாக ‘போக்கிரி’, ‘பூஜை’ ஆகிய படங்களில் நடித்த முகேஷ் திவாரி நடிக்கிறார். மேலும் மற்றொரு வில்லனாக ‘எதிர் நீச்சல்’, ‘பாண்டிய நாடு’ ஆகிய படங்களில் நடித்த சரத் லோகித் சிவா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ஜுன் மாத இறுதியில் இப்படத்தின் பாடல்களை வெளியிடவுள்ளனர். மேலும், ஜுலை மாதத்தில் இப்படத்தை வெளிக்கொண்டுவர மும்முரமாக வேலைகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தை ராம்பாபு புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் எம்.பி.ராம்பாபு தயாரிக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries