மன்னர் வகையறாவுக்காக விமல் – ரோபோ சங்கர் புதுக்கூட்டணி

201606141450474914_vimal-robo-shankar-new-joint-for-mannar-vagera_SECVPF‘தேவதையை கண்டேன்’, ‘திருவிளையாடல் ஆரம்பம்’, ‘பட்டத்து யானை’ ஆகிய படங்களை இயக்கிய பூபதி பாண்டியன் இயக்கும் புதிய படம் ‘மன்னர் வகையறா’. இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். ‘கயல்’ ஆனந்தி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், பிரபு, சரண்யா, நாசர், யோகி பாபு, ஜெயபிரகாஷ் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

இதுநாள் வரை சூரியுடன் காமெடி கூட்டணி அமைத்து வந்த விமல், தற்போது முதன்முறையாக இந்த படத்தில் ரோபோ சங்கருடன் கூட்டணி அமைத்திருக்கிறார். இப்படத்தில் ரோபோ சங்கர் கிட்டத்தட்ட சோலோ காமெடியனாகவே மாறியிருக்கிறாராம்.

பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய ஜாக்ஸ் இசையமைக்கிறார். அரசு பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. மேலும், முதல் பிரதி அடிப்படையில் விமலும் இப்படத்தின் தயாரிப்பாளராகியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜுன் 20-ந் தேதி தொடங்கவிருக்கிறது. முழுக்க முழுக்க காமெடி படமாக இது உருவாகவிருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online