பாகுபலி-2 கிளைமாக்ஸ் படப்பிடிப்பு தொடங்கியது

201606141102034447_Baahubali-II-climax-kick-start_SECVPFஎஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த ‘பாகுபலி’ படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இரண்டு பாகமாக உருவான இப்படத்தின் முதல் பாகத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை தொடர்ந்து, தற்போது இரண்டாம் பாகத்தை அதைவிட பிரம்மாண்டமாக உருவாக்க படக்குழுவினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

தற்போது ‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்கியுள்ளது. முதல்நாள் படப்பிடிப்பில் போர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியுள்ளனர். இதற்காக பிரம்மாண்ட அரங்குகள் எல்லாம் உருவாக்கி அங்கு படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். முதல் நாள் படப்பிடிப்பில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் சுமார் 70 நாட்கள் படமாக்க திட்டமிட்டுள்ளனர். ராணா டகுபதி சிங்கப்பூரில் நடக்கும் சைமா விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ளவிருப்பதால் ஜுன் 29-ந் தேதி முதல் ஜுலை 2-ந் தேதி வரை இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள மாட்டார் என தெரிகிறது.

கிளைமாக்ஸ் காட்சியை முடித்துவிட்டு செப்டம்பரில் படத்தின் இறுதிக்கட்ட பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளனர். அடுத்த வருடம் கோடை விடுமுறையில் இப்படம் வெளியாகும் என நம்பப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries