சக்ர வியுகம் – திரை விமர்சனம்

Warcraft-2016-1மனிதர்களை கொன்று தன்னுடைய சக்தியை பெருக்கிக் கொள்ளும் வேற்று கிரக அரசனான குல்டன், தன் பெரும் படையோடு பூமிக்குள் நுழைகிறான். தனது மக்களை பாதுகாக்க அரசன் லேன் வ்ரின், தனது அதீத சக்தி கொண்ட பாதுகாவலர்களோடு மேடிவ், கட்கர் மற்றும் தன் படையோடு தீய சக்திகளை எதிர்க்க புறப்படுகிறான்.

தீய சக்திகளின் இனத்தில் இருந்து சிறை பிடிக்கப்பட்ட கரோனாவும் இவர்களோடு இணைந்து போருக்கு புறப்படுகிறாள். இறுதியில், இந்த போரில் யார் வென்றார்கள்? தீய சக்திகளிடமிருந்து மனித இனம் காப்பாற்றப்பட்டதா? என்பதை சொல்லும் படமே ‘சக்ரவியுகம்’.

‘வார் கிராப்ட்’ என்று ஹாலிவுட்டில் வெளிவந்த படம் தமிழில் ‘சக்ர வியுகம்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது. தீய சக்திகளிடமிருந்து மக்களை காப்பாற்ற போராடும் மனிதர்களின் கதைதான் இது.

ஹாலிவுட்டுக்கு அதர பழசான கதைதான் என்றாலும், கதை களத்தையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்த விதத்தில் படம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இப்படம் ‘வேர்ல்டு ஆப் வார் கிராப்ட்’ என்ற வீடியோ கேமை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர்களும் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

பிரம்மாண்ட ஓநாய்கள், ராட்சத கழுகு, கொடூர பற்களை கொண்ட அரக்கர்கள் என படத்தில் பிரம்மாண்டத்திற்கும் குறைவில்லை. இயக்குனர் டங்கன் ஜோன்ஸ் ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்களின் ரசனைக்கேற்றவாறு எடுத்து மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார்.

சைமன் டக்கனின் ஒளிப்பதிவும், ரமின் ஜாவடியின் இசையும் படத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்திருக்கிறது.

மொத்தத்தில் ‘சக்ர வியுகம்’ வெற்றி களம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries