வில்லனாக மாறிய விடிவி கணேஷ்

201606151046210974_VTV-Ganesh-villain-in-new-movie_SECVPFசிம்பு-திரிஷா நடிப்பில் வெளிவந்த ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் சிம்புவின் நண்பராக நடித்தவர் ஒளிப்பதிவாளர் கணேஷ்.

இப்படத்திற்கு பிறகு அவர் விடிவி கணேஷ் என்று அழைக்கப்பட்டு வருகிறார். விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் இவருடைய நடிப்புக்கு கிடைத்த வெற்றி தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திரம் கலந்த காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வேகமாக வளர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சுந்தர்.சி நடிப்பில் இந்த வாரம் வெளியாகவுள்ள ‘முத்தின கத்திரிக்கா’ படத்தில் முதன்முதலாக விடிவி கணேஷ் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் சுந்தர்.சிக்கு இணையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இப்படத்தை தொடர்ந்து விடிவி கணேஷுக்கு வில்லன் வேடத்தில் நடிக்கம் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை வெங்கட்ராகவன் இயக்கியுள்ளார்.

பூனம் பாஜ்வா, சிங்கம் புலி, கிரண், ரவி மரியா, சதிஷ், யோகிபாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அவ்னி மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries