விநாயகர் பற்றி டுவிட்டரில் விமர்சனம்: இயக்குனர் ராம்கோபால்வர்மாவுக்கு மும்பை கோர்ட்டு சம்மன்

201606161155204034_Mumbai-court-summon-to-ramgopalvarma_SECVPFஇந்தி மற்றும் தெலுங்கு பட டைரக்டர் ராம்கோபால்வர்மா, ஏராளமான படங்களை தயாரித்துள்ளார். இவர் 2014–ம் ஆண்டு டுவிட்டரில் விநாயகர் பற்றி விமர்சனம் செய்திருந்தார்.

இது இந்துக்களின் மத நம்பிக்கையை அவமானப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி அவர் மீது மும்பை அந்தேரி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குனர் ராம்கோபால் வர்மா வருகிற ஜூலை 19–ந் தேதிக்கு முன்பு கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது.

அவர் ஆஜராக முடியாத பட்சத்தில் அவரது வக்கீல் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. ஐதராபாத்தில் உள்ள ராம்கோபால்வர்மா வீட்டுக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online