கபாலி படம் வெற்றி பெற ரஜினி மகள் சவுந்தர்யா காளஹஸ்தி கோவிலில் பூஜை

201606161339199289_Soundarya-Rajinikanth-special-pooja-in-Kalahasthi-temple-for_SECVPFரஜினி நடித்துள்ள ‘கபாலி’ படத்தின் பாடல்கள் கடந்த 11–ந்தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பாடல்கள் ரசிகர்களின் அமோக வரவேற்வை பெற்றுள்ளது. அடுத்த மாதம் ‘கபாலி’ படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ‘கபாலி’ படம் வெற்றி பெறுவதற்காக ரஜினி மகள் சவுந்தர்யா காளஹஸ்தி கோவிலில் சிறப்பு பூஜை நடத்த முடிவு செய்தார். இதற்காக அவர் காளஹஸ்தி கோவிலுக்கு சென்று, அங்கு ராகு கேதுவுக்கு சிறப்பு பூஜை செய்தார்.

பின்னர் வாயுலிங்கேஸ்வரர், ஞான பிரசுணம்பிகா தாயாரை வழிபட்டார். குரு தட்சணாமூர்த்தி முன்பு வேத பண்டிதர்களிடம் ஆசி பெற்றார்.

பின்னர் சவுந்தர்யா நிருபர்களிடம் கூறியதாவது:–

‘கபாலி’ படம் எல்லா தரப்பினரையும் கவரும் வகையில் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு ரசிகர்களை இந்த படம் கவரும். பெரிய வெற்றிப் படமாக அமையும். இந்த படம் வெற்றிக்காக வாயுலிங்கேஸ்வரரின் ஆசியை பெறுவதற்காக இங்கு வந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online