அமலா பால் தம்பி வில்லன் ஆனார்

201606171823206229_Amala-Paul-brother-became-a-villain_SECVPFநடிகை அமலாபாலின் தம்பி அபிஜித் பால். சில மலையாளப் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். சினிமாவில் முக்கிய இடம் பிடிக்க வேண்டும் என்பது இவரது ஆசை.

இதற்காக தனது அக்காவிடம் நடிப்பு பயிற்சி பெற்றார். இது தவிர நடன பயிற்சி, சண்டை பயிற்சியும் பெற்று வந்தார். இந்த நிலையில் அமலாபால் கணவர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் ‘தேவி’ படத்தில் அபிஜித் பால் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

பிரபுதேவா–தமன்னா ஜோடியாக நடிக்கும் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பற்றி அபிஜித் பால் கூறுகிறார்…

“என் அக்காள் கணவர் திடீர் என்று ஒரு நாள் என்னிடம் படத்தில் வில்லனாக நடிக்கிறாயா என்று கேட்டார். உடனே மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டேன். ‘தேவி’ படத்தில் நடிக்கத் தொடங்கினேன். ஏற்கனவே அக்காவிடம் நடிப்பு பயிற்சி பெற்றதால் எளிதாக நடிக்க முடிந்தது.

முதல் படமே வில்லனா? என்று நண்பர்கள் கேட்டார்கள். புகழ் பெற்ற ஹீரோக்கள் எல்லோருமே வில்லனாக இருந்து ஹீரோக்கள் ஆனவர்கள்தானே என்று அவர்களுக்கு பதில் சொன்னேன். அக்காவை போல் நடிப்பில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.”

இந்த படத்தில் நடிக்கும் அபிஜித் மீது அக்கறை கொண்டுள்ள அமலாபால், தம்பி நடிக்கும் இடத்துக்கே சென்று நடிப்பு சொல்லிக் கொடுக்கிறார். சிறப்பான நடிப்பை அபிஜித் வெளிப்படுத்துகிறார் என்று படக்குழுவினர் தெரிவித்தனர். அடுத்த படத்துக்கு புது கதாநாயகன் தயாராகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online