திகிலோடு அஞ்சலியுடன் மீண்டும் நெருங்கும் ஜெய்

201606171107580551_Jai-Anjali-again-act-in-horror-movie_SECVPFஅஞ்சலியும், ஜெய்யும் இணைந்து ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே அஞ்சலியும், ஜெய்யும் காதலிப்பதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால், இரண்டு தரப்பிலும் இதுகுறித்து உறுதியான தகவல்கள் வெளியிடவில்லை.

அதன்பிறகு, சித்தியுடனான பிரச்சினையில் அஞ்சலி, தலைமறைவான பிறகுகூட ஜெய்யிடம் அஞ்சலி அடைக்கலமாகியிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அந்த செய்தியும் உண்மையில்லாமல் போனது. இந்நிலையில், இருவரும் காதலர்கள் இல்லை என்பதை ஒருவருக்கொருவர் உறுதி செய்தனர்.

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு அஞ்சலி தற்போது நடிக்கத் தொடங்கியுள்ள இந்நேரத்தில் மீண்டும் ஜெய்யுடன் இணைந்து புதிய படத்தில் அஞ்சலி நடிக்கவிருக்கிறார். இப்படத்தை சினிஸ் என்று புதுமுக இயக்குனர் இயக்குகிறார். இப்படம் திகில் நிறைந்த பேய் படமாக உருவாகவிருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜுன் 6-ந் தேதி சென்னையில் தொடங்கியுள்ளது. இதில் அஞ்சலி ஐடி கம்பெனியில் வேலை பார்ப்பவராக வருகிறாராம். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை தற்போது படமாக்கி வருகின்றனர். கூடுதல் தகவல் என்னவென்றால், கதாநாயகன், கதாநாயகி உள்ளிட்ட இப்படத்தில் நடிப்பவர்கள் எல்லோருமே பேயாக வருகிறார்களாம் என்பதுதான்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online