ஜெயம் ரவி பிறந்த நாளில் போகன் பட பாடல்கள்

201606181732185674_Jayam-Ravi-birthday-Bogan-film-songs-releasing_SECVPFரோமியோ ஜூலியட் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜெயம் ரவி – ஹன்சிகா – இயக்குனர் லக்‌ஷ்மன் – இமான் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘போகன்’. பிரபல நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா இப்படத்தை தயாரித்து வருகிறார். அரவிந்த் சாமி, முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் பாடல்கள் எப்போது வெளியாகும் என்று காத்திருந்த நிலையில், ஜெயம் ரவியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக செப்டம்பர் 10-ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online