விஷால் நடிப்பில் தற்போது ‘கத்திச்சண்டை’ படம் உருவாகி வருகிறது. சுராஜ் இயக்கி வரும் இப்படத்தில், விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். மேலும் வடிவேலு, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு மகாபலிபுரம் அருகே உள்ள கல்லூரி ஒன்றில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த படத்தில் பணிபுரிந்த 45 வயது செல்வம் என்ற லைட்மேன், படப்பிடிப்பின் போது திடீரென மயங்கி விழுந்தார். அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியதால் படக்குழுவினர் சோகத்தில் மூழ்கினர்.
லைட்மேன் செல்வம் மரணம் காரணமாக படப்பிடிப்பு தற்போதைக்கு நிறுத்தப்பட்டது. படக்குழுவினர் செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.